ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வம் அதிமுக பொதுக்குழு செல்லாது என்று தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருந்த நிலையில் தற்போது மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.
அதிமுக பொதுக்குழுவில் செய்யப்பட்ட தீர்மானங்களை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கக் கூடாது என்று ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், கேபி.முனுசாமி நத்தம் விஸ்வநாதன் ஆகியோரை அதிமுக துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. மேலும், பொன்னையன் எம்ஜிஆர் மன்ற செயலாளராக நியமித்து நேற்று எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.
இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்திற்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் , எடப்பாடி பழனிச்சாமியின் இந்த இந்த நியமனங்கள் சட்ட விதிகளுக்கு எதிரானது. ஏற்கனவே இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இதனால் இந்த நியமனம் செல்லாது என்றும் இதற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்க கூடாது என்று ஓ.பன்னீர்செல்வம் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்

