சினிமாவெள்ளித்திரை

மீண்டும் லீக்கான விஜய் பட காட்சிகள்!

நடிகர் விஜய் நடிப்பில், வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தின் காட்சி மீண்டும் இணையத்தில் லீக்காகியுள்ளது.

லீக்கான காட்சிகள்

நடிகர் விஜய் அடுத்ததாக நடித்து வரும் திரைப்படம் ‘வாரிசு’. பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கியுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ளது. இப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ‘வாரிசு’ படத்தின் ‘ரஞ்சிதமே ரஞ்சிதமே’ என்ற பாடலின் காட்சிகள் இணையத்தில் லீக்காகியுள்ளது. இதனால் படக்குழு அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.

Related posts