பாபா படத்தை பாத்துவிட்டு நிறைய பேர் இமய மலைக்கு சென்றுள்ளர்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த்
சென்னை நுங்கம்பாக்கத்தில் யோகதா சத்சங்க சொசைட்டி ஆஃப் இந்தியா சார்பில் இனிய வெற்றிகர வாழ்வு என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த் தமிழாக்கம் செய்யப்பட்ட யோகதா சத்சங்க புத்தகத்தை வெளியிட்டார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ரஜினி, ‘நான் எத்தனையோ படங்களில் நடித்து விட்டேன். ஆனால் ஆத்ம திருப்தி கொடுத்த படங்கள் பாபா, ராகவேந்திரா.
மேலும், நான் பணம், புகழ், பெயர், பெரிய அரசியல் வாதிகள் என்று அத்தனையும் பார்த்துவிட்டேன். ஆனால் அதில் 10 சதவீத நிம்மதி கூட கிடைக்கவில்லை. ஏனென்றால் சந்தோஷம், நிம்மதி நிரந்தரம் கிடையாது’ என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.

