இன்று மாலை வாடிவாசல் படத்தின் புதிய அப்டேட்டை வெளியிடப்போவதாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அறிவித்துள்ளார்.
நடிகர் சூர்யா
நேற்று சூரரைப் போற்று படத்திற்காக நடிகர் சூர்யாவிற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது நேற்று அறிவிக்கப்பட்டது. மேலும், நடிகர் சூர்யா தனது 48வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இவரின் பிறந்தநாளையொட்டி ரசிர்களுக்கு இன்று மாலை வாடிவாசல் படத்தின் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட போவதாக அப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
வாடிவாசல் அப்டேட்
வாடிவாசல் திரைப்படத்திற்காக மாடுபிடி வீரர்களுடன் நடிகர் பயிற்சி பெற்ற காட்சிகளை இன்று மாலை 5.30 மணிக்கு வெளியிடுவதாக கலைப்புலி எஸ்.தாணு தெரிவித்துள்ளார். செல்லப்பா எழுதிய வாடிவாசல் என்ற நாவலை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தை வெற்றி மாறன் இயக்கி வருகிறார்.
தேசிய விருது வென்ற திரு @Suriya_offl அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று மாலை 5:30 மணிக்கு, #வாடிவாசல் திரைப்படத்திற்காக மாடுபிடி வீரர்களுடன் பயிற்சி பெற்ற காட்சிகள் வெளியிடுகிறோம் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறோம் @VetriMaaran @gvprakash @VelrajR @jacki_art #HBDSuriya pic.twitter.com/pEsbmsqAYS
— Kalaippuli S Thanu (@theVcreations) July 23, 2022

