சமூகம்சினிமா

ஆப்கானிஸ்தானில் மீண்டும் திரையரங்குகள் திறப்பு – தலிபான்கள் உத்தரவு !

ஆப்கானிஸ்தானில் ஒரு வருடத்திற்கு பிறகு சினிமா திரையரங்குகளை திறக்க தலிபான்கள் அனுமதி அளித்துள்ளனர்.

திரையரங்குகள் 

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை பிடித்து ஒரு ஆண்டு நிறைவு பெற்றுள்ளது. தலிபான்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, பெண்கள் தேவையில்லாமல் வெளியே வரக்கூடாது, பெண்கள் வெளியே வரும்போது உடலை முழுவதும் மூடியபடி வர வேண்டும் என்பது போன்ற பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார்கள். மேலும், பெண்கள் மேல்நிலை கல்வி கற்கவும், வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தலிபான்கள் சினிமா திரையரங்குகளையும் மூடிவிட்டனர்.

இந்நிலையில், ஒரு ஆண்டுக்கு பிறகு தற்போது சினிமா திரையரங்குகளை திறக்க தலிபான்கள் அனுமதி அளித்துள்ளனர். அதன்பெயரில் 37 சினிமா படங்கள், சில ஆவணப்படங்கள் ரிலீஸ் ஆகா தயாராகவுள்ளது.

Related posts