இந்தியாதொழில்நுட்பம்வணிகம்

ஜியோ 5ஜி சேவை அறிமுகம் – முகேஷ் அம்பானி அறிவிப்பு !

ஜியோ 5ஜி சேவை தீபாவளி முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்று லையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.

5ஜி சேவை

இன்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் 45-வது ஆண்டு பொதுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் நிர்வாக இயக்குநர் முகேஷ் அம்பானி, நாட்டின் வளர்ச்சியில் ஜியோ நிறுவனம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. மேலும், சராசரியாக மாதத்திற்கு 20 ஜிபி டேட்டாவை ஜியோ வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். அந்தவகையில், சென்னை, மும்பை, கொல்கதா, டெல்லி ஆகிய நகரங்களில் ஜியோ 5ஜி இணைய சேவை தீபாவளி முதல் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்தார். மேலும், அவர் பேசும் பேசுகையில், ஜியோ 5ஜி உலகிலேயே மிகப் பெரிய மற்றும் அதிநவீன 5ஜி நெட்வொர்காக இருக்கும் என்றும் இதன்மூலம் 4ஜி சேவையைவிட 10 மடங்கு வேகத்தில் தரவுகளை விரைவாக பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்யலாம் என்றும் முகேஷ் அம்பானி கூறியுள்ளார்.

Related posts