அரசியல்இந்தியாசமூகம்

பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு – மத்திய உள்துறை தகவல் !

பட்டியலின பிரிவை சேர்ந்தவர்கள் மற்றும் பழங்குடியினருக்கு எதிராக நடைபெறும் சமூக குற்றங்கள் அதிகரித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

குற்றங்கள் அதிகரிப்பு

இது தொடர்பாக தெலுங்கான எம்பிக்கள் கோமதி ரெட்டி, வெங்கட் ரெட்டி, மான்னே ஸ்ரீனிவாஸ் ரெட்டி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினர். இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா பதிலளித்துள்ளார். அவர் கூறுகையில், ‘கடந்த 2018ம் ஆண்டு பட்டியலின மக்களுக்கு எதிராக 42,793 குற்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால், 2020ம் ஆண்டு 50,000 ஆக அதிகரித்துள்ளது. பழங்குடியினருக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட குற்ற சம்பவங்கள் 2018ம் ஆண்டு 6,528 ஆக இருந்தது. ஆனால், 2020ம் ஆண்டு 8,272 அதிகரித்துள்ளது.

பட்டியலின சாதிகளுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட குற்ற சம்பவங்கள் உத்தரபிரதேசம் மற்றும் பிகார் மாநிலத்தில் அதிகமாக நிகழ்ந்துள்ளது. பழங்குடியின மக்களுக்கு எதிராக நடைபெற்ற குற்றங்கள் மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் அதிகமாக நிகழ்கிறது. மத்திய பிரதேசத்தில் 2020ல் 2,401 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. ராஜஸ்தானில்2020ல் 1,878 வழக்குகள் பதியப்பட்டுள்ளதுதொடர்ந்து பட்டியலின மக்கள் மற்றும் பழங்குடியினர் மீது நிகழ்த்தபடும் இந்த வன்முறையை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

Related posts