எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஏ.கே. 61’ திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரிலீஸ் தேதி
‘வலிமை’ படத்தை தொடர்ந்து நடிகர் அஜித், இயக்குனர் எச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் திரைப்படம் ‘ஏ.கே. 61’. இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், விசாகப்பட்டினம், சென்னை, புனே போன்ற பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. மேலும், இப்படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்கள். இதனிடையே ‘ஏ.கே. 61’ அடுத்த கட்ட படப்பிடிப்பை பாங்காக்கில் நடத்த திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தை தீபாவளிக்கு வெளியீட படக்குழு திட்டமிட்டிருந்ததாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில், தற்போது படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டு உள்ளதால் பொங்கல் பண்டிகையில் வெளியீட உள்ளதாக கூறப்படுகிறது.

