சினிமாவெள்ளித்திரை

அருண் விஜய் படத்தின் டிரைலர் வெளியானது !

டிரைலர் ரிலீஸ்

யானை, தமிழ் ராக்கர்ஸ் படங்களை அடுத்து அருண் விஜய் நடித்துள்ள திரைப்படம் சினம். ஹரிதாஸ் படத்தை இயக்கிய ஜி.என்.ஆர்.குமாரவேலன் இப்படத்தை இயக்கியுள்ளார். கதாநாயகியாக பாலக் லால்வாணி நடிக்க, ஷமீர் இசையமைத்துள்ளார். ஆக்ஷன் திரில்லராக உருவாகியிருக்கும் இத்திரைப்படம் செப்டம்பர் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சமீபத்தில் ‘நெஞ்செல்லாம்’ என்ற ஃபர்ஸ்ட் சிங்கள் வெளியாகி கவனம் பெற்றது.

இந்நிலையில், சினம் திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் கவனம் பெற்று வருகிறது.

Related posts