அரசியல்இந்தியாசமூகம்

ராகுல் காந்தி மேற்கொள்ளும் யாத்திரை மக்களை ஒன்று சேர்க்கும் – காங்கிரஸ் முதத்தலைவர் !

ராகுல் காந்தி மேற்கொள்ளும் யாத்திரை ஒற்றுமைக்கான யாத்திரை என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி யாத்திரை

‘இந்தியா அனைவருக்குமான நாடு’ என்ற கோட்பாட்டை எடுத்துரைத்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வருகிற செப்டம்பர் 7ம் தேதியில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான மிகப்பெரிய பாதயாத்திரையை தொடங்கயிருக்கிறார். இந்த யாத்திரை 150 நாட்களில் 3,500 கிலோ மீட்டர் தூரம் கடக்க அவர் திட்டமிட்டுள்ளார். இதற்கான தொடக்க நிகழ்ச்சி கன்னியாகுமரி கடற்கரை சாலையில் செப்டம்பர் 7ம் தேதி நடக்கிறது. இந்த யாத்திரைக்கான ஏற்பாடுகளை கட்சியின் மூத்த தலைவர் மற்றும் நிர்வாகிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், பாஜக மேற்கொண்ட ரத யாத்திரை நாட்டை பிளவுபடுத்துவதற்கான யாத்திரை. ராகுல் காந்தி மேற்கொள்ளும் யாத்திரை ஒற்றுமைக்கான யாத்திரை, மக்களை ஒன்று சேர்க்கும் யாத்திரை’ என்று கூறியுள்ளார்.

Related posts