சமூகம் - வாழ்க்கைதமிழ்நாடு

பைக் மற்றும் கார் நேருக்கு நேர் மோதல் – சம்பவ இடத்தில் 3 பேர் பலி !

திருச்செங்கோடு பகுதியில் பைக் மற்றும் கார் நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

சாலை விபத்து

திருச்செங்கோடு டு வேலூர் செல்லும் ரோட்டில் புளியம்பட்டி சுரக்கா தோட்டம் பிரிவு அருகில் திண்டுக்கல்லை சேர்ந்த சுரேஷ் (35), மற்றும் சுப்பிரமணி (50) ஆகிய இருவரும் திருச்செங்கோடு நோக்கி பைக்கில் சென்று கொண்டு இருந்தனர். இந்நிலையில், திருச்செங்கோடு நெய்க்காரப்பட்டி சேர்ந்த சிவசக்தி நகர் ராமகிருஷ்ணன் (29) என்பவர் வேலூர் நோக்கி வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, பைக்கும் காரும் நேருக்கு நேர் மோதியது.

இந்த கோர விபத்தில் பைக்கில் வந்த இரண்டு நபர்களும் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். அதில் காரில் வந்த ஜீவிதா (21) என்ற திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். விபத்து குறித்து திருச்செங்கோடு ஊரக காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உடலை மீட்டு பேரத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related posts