அரசியல்ஆன்மீகம்இந்தியாசமூகம்

பஞ்சாபில் மதமாற்ற மோசடி – தேவாலய சிலைகள் உடைப்பு, காருக்கு தீவைப்பு !

பஞ்சாபில் மோசடி செய்து மதமாற்றம் செய்யப்படுவதாக புகார் எழுந்ததை தொடர்ந்து, தேவாலயத்தில் இருந்த சிலைகள்  சேதப்படுத்தப்பட்டு, பாதிரியார் காரும் தீ வைத்து எரிக்கப்பட்டது.

மதமாற்ற மோசடி

அகல் தக்த் ஜதேதர் என்ற சீக்கிய அமைப்பின் தலைவர் ஹர்பரீத் சிங் வெளியிட்ட அறிக்கையில், கிறிஸ்தவ மிஷனரிகள், சீக்கியர்களிடம் மோசடி செய்து மதமாற்றம் செய்து வருகின்றன. சீக்கியர்கள் மற்றும் இந்துக்கள் ஏமாற்றப்பட்டு மதமாற்றத்தில் ஈடுபட்டு வருகின்றன. அரசின் ஆதரவுடன் இது செயல்படுகிறது. ஓட்டு வங்கி அரசியல் காரணமாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு தயங்குகிறது என அறிக்கையில் ககூறியுள்ளார். இந்த சூழ்நிலையில் டர்ன் டாரன் மாவட்டத்தில் உள்ள தகார்பூர் கிராமத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த சிலைகளை அடித்து நொறுக்கியதுடன், அங்கு நின்று கொண்டிருந்த காருக்கும் தீ வைத்தனர். இதனால், அங்கு பதற்றமான சூழல் நிலவிவருகிறது.

Related posts