கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கி வரும் இந்தியன் 2 படத்தில் பிரபல கதாநாயகி ரகுல் ப்ரீத் சிங் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியன்-2
கமல்ஹாசன் நடிப்பில் ‘இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை 25 ஆண்டுகளுக்கு பிறகு தொடங்கினார் இயக்குனர் ஷங்கர். பின்னர் பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு பணிகள் நிறுத்தப்பட்டது. அதனையடுத்து தற்போது விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்தியன்-2 படத்தை மீண்டும் தொடங்கவுள்ளதாக கமல் ஹாசன் தெரிவித்திருந்தார். மேலும், படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளது என்றும் தகவல்கள் வெளியானது. இதனையடுத்து சமீபத்தில் இந்தியன்-2 படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.
ஆனால் கமல்ஹாசன் அமெரிக்காவில் இருப்பதால் அவர் இல்லாத காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. இந்நிலையில், இந்தியன்-2′ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ரகுல் ப்ரீத் சிங் நடித்த வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

