திருச்சிற்றம்பலம் வெளியான திரையரங்கில் ரசிகர்கள் ஸ்கிரீனை கிழித்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனுஷ் படம்
மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘திருச்சிற்றம்பலம்’. இந்த படத்தில் நடிகை நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு திரையரங்கில் வெளியாகும் தனுஷ் படம் என்பதால் ரசிகர்கள் திரையரங்கை நோக்கி படையெடுத்தனர்.
ஸ்கிரீன் கிழிப்பு
இந்நிலையில், திருச்சிற்றம்பலம் படம் வெளியான சென்னை, கோயம்பேட்டில் உள்ள திரையரங்கில் படம் பார்த்த ரசிகர்கள் சிலர் மகிழ்ச்சியில் ஸ்கிரீன் முன்பு நடனமாடி, ஸ்கிரீனை கிழித்துள்ளனர். இதனால் அந்த திரையரங்கின் உரிமையாளர் கவலை அடைந்துள்ளனர்.

