தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் தலைவர்கள் கூறியுள்ளார்.
வலியுறுத்தல்
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அறிக்கையில், ‘தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பந்தமாக நீதிபதி அருணா ஜெகதீசன் சமர்ப்பித்துள்ள முழு அறிக்கையினை உடனடியாக வெளியிட வேண்டும். மேலும், துப்பாக்கி சூட்டில் தவறு செய்த காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். இதே போன்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், ‘குற்றம் செய்த போலீசாரையும், அதற்க்கு தூண்டிய அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

