மாண்புமிகு குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு அவர்களின் கரங்களால் 71ஆவது தேசிய திரைப்பட விருது பெறும் அனைத்து திரைக்கலைஞர்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
குறிப்பாக, தாதா சாகிப் பால்கே விருது பெற்றுள்ள நடிகர் திரு. மோகன்லால், தமிழகத்தில் இருந்து Parking திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான விருதை பெற்றுள்ள திரு. எம். எஸ். பாஸ்கர் அவர்களுக்கும், சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்ற அப்படத்தின் தயாரிப்பாளர் திரு. சினிஷ் அவர்களுக்கும், சிறந்த திரைக்கதைக்கான விருதை பெற்ற அப்படத்தின் இயக்குநர் திரு. ராம்குமார் பாலகிருஷ்ணன் அவர்களுக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
‘வாத்தி’ திரைப்படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் பிரிவில் விருது பெற்றிருக்கும் திரு.G V பிரகாஷ் அவர்களுக்கும் எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று விருது பெறும் அனைவரும் நம் தேசத்தின் அளவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் பல விருதுகளை வென்று குவிக்க இறைவன் துணை நிற்கட்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.
இவ்வாறு தனது எக்ஸ் பக்கத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்

