அரசியல்இந்தியாதமிழ்நாடு

புதுச்சேரி சட்டப்பேரவை : இன்று முதல் மூன்று நாட்களுக்கு மூடல் – என்ன காரணம் ?

குடியரசு தலைவர் தேர்தல் வரும் 18ந் தேதி நடைபெறுவதையொட்டி வாக்குப்பதிவு நடைபெறும் புதுச்சேரி சட்டப்பேரவை இன்று முதல் மூன்று நாட்களுக்கு மூடப்படுகின்றது.

குடியரசு தலைவர் தேர்தல் 

இந்தியா குடியரசு தலைவரை தேர்வு செய்ய வரும் 18ந்தேதி தேர்தல் நடைபெறுகின்றது. இதில் மக்களவை, மாநிலங்களவை மற்றும் எம்.எல்.ஏக்கள் வாக்களிக்க இருக்கின்றனர். புதுச்சேரியில் குடியரசு தலைவர் தேர்தலில் வாக்களிக்க பேரவையில் உள்ள செயலக கட்டிடத்தில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், வாக்களிக்கும் இயந்திரம் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. சட்ட பேரவை வளாகம் முழுவதும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகின்றது.

புதுச்சேரியை பொறுத்தவரை 30 எல்.எல்.ஏக்கள், தலா ஒரு மாநிலங்களவை, ஒரு மக்களவை உறுப்பினர் உள்ளநிலையில், மக்களவை உறுப்பினர் மட்டும் இந்த வாக்குச்சாவடியில் வாக்களிக்க அனுமதி பெற்றுள்ளார். ஆகவே இந்த தேர்தலில் புதுச்சேரி வாக்குச்சாவடியில் ஒரு எம்.பி மற்றும் 30 எம்.எல்.ஏக்கள் வாக்களிக்கின்றார்கள்.

Related posts