தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
எக்ஸ்பிரஸ் ரெயில்
இது குறித்து ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எர்ணாகுளம்-வேளாங்கண்ணி செல்லும் வண்டி எண்:06035 இடையே மதியம் 12.35 மணிக்கு புறப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலின் சேவைகள், கூடுதலாக வருகிற ஆகஸ்ட் 13ம் தேதி முதல் நவம்பர் 12ம் தேதி வரை சனிக்கிழமைகளில் இயக்கப்படும். வேளாங்கண்ணி-எர்ணாகுளம் செல்லும் வண்டி எண்:06036 இடையே மாலை 6.30 மணிக்கு புறப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலின் சேவைகள், கூடுதலாக வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி முதல் நவம்பர் 13ம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும்.அதேபோல் மன்னார்குடி-திருச்சி செல்லும் வண்டி எண் :06827 இடையே காலை 6.30 மணிக்கும் மறுமார்க்கமாக திருச்சி-மன்னார்குடி இடையே மாலை 5.45 மணிக்கும் புறப்படும் முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மீண்டும் இயக்கப்படுகிறது. மேலும், கூடுதல் நிறுத்தங்களாக தொண்டைமான்பட்டி மற்றும் மஞ்சத்திடல் ஆகிய ரெயில் நிலையங்களில் நிறுத்தப்படும்’ என தெற்கு ரயில்வே அறிக்கையில் தெரிவித்துள்ளது.

