ஏகே 61 படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏகே 61 படப்பிடிப்பு
அஜித் நடிப்பில், ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான திரைப்படம் வலிமை. போனி கபூர் தயாரித்திருந்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனைத்தொடர்ந்து இயக்குனர் எச்.வினோத், நடிகர் அஜித் மற்றும் தயாரிப்பாளர் போனிகபூர் மூன்றாவது முறையாக மீண்டும் இணைந்து பணியாற்றி வரும் படம் ஏ.கே.61. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் ஒரு மாதம் நடைபெற்றது.
அதனையடுத்து அஜித் ஐரோப்பாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இந்நிலையில், ஏ.கே.61 படப்பிடிப்பு அடுத்த வாரம் மீண்டும் சென்னையில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.