பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 13 வயது சிறுமியின் 28 வார கருவை கலைக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
பாலியல் வன்கொடுமை
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அதன்மூலம் அந்த சிறுமி கருவுற்றார். சிறுமியின் கர்ப்பத்தை கலைக்க அனுமதிக்க வேண்டும் என சிறுமியின் பெற்றோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாதிக்கப்பட்ட சிறுமியின் உடல் நலம், மனம் ஆகியவையை கருத்தில் கொண்டும், மருத்துவர்களின் ஆலோசனையின்படி 28 வாரங்கள் 3 நாட்களான அந்த கருவை கலைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்த்ரவிட்டது.
மேலும், இதற்காக தமிழக அரசு, சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழுவை அமைத்து, சிறுமியின் கருவை அகற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

