தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான ஏ.எல்.விஜய்யின் தாயார் வள்ளியம்மை உடல்நலக்குறைவால் காலாமானார்.
ஏ.எல்.விஜய்யின் தாயார்
கடந்த 2007ம் ஆண்டு வெளியான கிரீடம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.எல்.விஜய். இதனைத்தொடர்ந்து மதராசபட்டினம், தெய்வத் திருமகள், தாண்டவம் என்று பல தரமான படங்களின் மூலம் பிரபலமானார். மேலும், தமிழில் முன்னணி நடிகரான விஜயை வைத்து தலைவா என்ற படத்தை இயக்கினார். இயக்குனர் ஏ.எல்.விஜய், தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இயக்குனர் ஏ.எல்.விஜய்யின் தாயார் வள்ளியம்மை உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலை காலமானார். இந்த தகவலறிந்த ஜி.வி.பிரகாஷ்குமார் தனது குடும்பத்தினருடன் வந்து அஞ்சலி செலுத்தினார்.

