படப்பிடிப்பு நிறைவு
ஜெயமோகனின் ‘துணைவன்’ சிறுகதையை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் ‘விடுதலை’. இதில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்க, நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்க, ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதனிடையே அவ்வப்போது இதன் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.
இந்நிலையில், ‘விடுதலை’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக நடிகர் சூரி தனது ட்விட்டர் பக்கதில் அறிவித்துள்ளார்.

