புத்தாண்டு விழா
ஆண்டுதோறும் டிசம்பர் 31-ம் தேதி நள்ளிரவு முதல் ஆங்கில புத்தாண்டு மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக கிறிஸ்தவர்களால் சிறப்பாக கொண்டாடப்படும். கிறிஸ்தவ சபைகளிலும் புத்தாண்டு சிறப்பு ஆராதனை நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் 2022-ம் ஆண்டு இன்று நிறைவுபெற்று. புதிய ஆண்டன 2023 பிறக்கவிருக்கிறது. இதனை வரவேற்கும் விதமாக அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் இரவு 10 மணி முதல் சிறப்பு ஆராதனை தொடங்கவுள்ளது.
சிறப்பு வழிபாடு
சென்னையை பொறுத்தவரை சாந்தோம் தேவாலயம், பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலயம், எழும்பூர், பெரம்பூர் லூர்துமேரி, மாதவரம் போன்ற திருச்சபை ஆலங்களில் இன்று சிறப்பு வழிபாடு நடைபெறவுள்ளது ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கிறிஸ்தவ ஆலயங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

