சினிமாவெள்ளித்திரை

ரிலீஸ் தேதியை அறிவித்த சிம்பு படக்குழு!

ரிலீஸ் தேதி

வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிம்பு ‘பத்து தல’, ‘கொரோனா குமார்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அதில் ‘பத்து தல’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ‘முஃப்தி’ என்ற கன்னட படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியுள்ள இப்படத்தை ‘சில்லுனு ஒரு காதல்’ பட புகழ் இயக்குனர் ஒபலி என்.கிருஷ்ணா இயக்கியுள்ளார். மேலும், இதில் கௌதம் கார்த்திக், கௌதம் மேனன், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், ‘பத்து தல’ திரைப்படம் வருகிற மார்ச் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

Related posts