சினிமாவெள்ளித்திரை

துணிவு படத்தின் டிரைலர் அறிவிப்பு!

டிரைலர் அறிவிப்பு

நடிகர் அஜித், இயக்குனர் எச்.வினோத் கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘துணிவு’. இதில் நடிகை மஞ்சுவாரியர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பொங்கலுக்கு வெளியாகும் இப்படத்தின் ‘சில்லா சில்லா’, காசேதான் கடவுளடா’, ‘கேங்ஸ்டா’ ஆகிய பாடல்கள் ஏற்கனவே வெளியாகி வைரலாகி உள்ளது.

இந்நிலையில், ‘துணிவு’ படத்தின் டிரைலர் இன்று மாலை 7 மணியளவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Related posts