கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கலவரம்
கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி விடுதியில் 12ம் வகுப்பு மனைவி தற்கொலை செய்துகொண்டதற்கு தனியார் பள்ளிக்கு எதிராக நேற்று போராட்டம் நடைபெற்றது. பின்னர் போராட்டம் கலவரமாக வெடித்தது. இதனால் கலவரத்தில் ஈடுப்பட்ட பலரும் கைது செய்யப்ப்ட்டனர். இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சீமான் அறிக்கை
அந்த அறிக்கையில், ‘கள்ளக்குறிச்சி மாவட்டம் அருகே சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 13ஆம் தேதி 12ம் வகுப்பு படிக்கும் மாணவி ஸ்ரீமதி பள்ளியில் மர்மமான முறையில் உயிரிழந்து ஐந்து நாட்கள் ஆகியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததற்கு தமிழக அரசில் அலட்சியப்போக்கே இத்தனை வன்முறைகளுக்கும் முக்கியக் காரணம். திமுக அரசு தன் மீதான தவறுகளை மறைப்பதற்காகப் போராடிய மக்களை கலவரக்காரர்களாகச் சித்தரிக்க முயல்கிறது. நீதிவேண்டி போராடிய மக்கள் மீதான கைது நடவடிக்கை நியாயமா? போராடுவது தவறு என்றால் மக்களைப் போராடும் நிலைக்குத் தள்ளிய அரசும் குற்றவாளிதான்’ என்று சீமான் குறிப்பிட்டுள்ளார்.

