விருதுநகரில், டீ குடிக்க சென்ற போலீஸின் துப்பாக்கியுடன் போட்டோ சூட் நடத்திய கைதியின் உறவினர். இதனால் 2 போலீசார் சஸ்பெண்ட்.
விருதுநகர் மாவட்டம்
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் பகுதியை சேர்ந்த அன்பரசன், ஆறுமுகவேல் ஆகிய இருவரும் இருக்கன்குடி காவல் நிலையத்தில் காவலர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு விருதுநகர் கிளை சிறையில் இருந்து விசரணைக்காக ஜான்பாண்டியன் என்ற கைதியை அழைத்து கொண்டு துப்பாக்கியுடன் நீதிமன்றத்திற்கு சென்றனர்.
துப்பாக்கியுடன் போட்டோ சூட்
விருதுநகர் நீதிமன்றத்தில் கைதியை ஆஜர்படுத்தி விட்டு பின்னர் அருகில் உள்ள டீ கடையில் இரண்டு காவலர்களும் டீ குடிக்க சென்றுள்ளனர். அப்போது அங்கு வந்த ஜான்பாண்டியனின் உறவினர் ஒருவரிடம் இரண்டு காவலர்களும் துப்பாக்கியை கொடுத்து விட்டு டீ குடிக்க சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஜான்பாண்டியனின் உறவினர் போலீஸ் கொடுத்த துப்பாக்கியை வைத்து விதவிதமாக தன்னை புகைப்படம் கொண்டுள்ளார். பின்னர் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளிட்டுள்ளார்.
சஸ்பெண்ட்
இதையடுத்து, கைதியின் உறவினர் கையில் போலீஸ் துப்பாக்கி இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனை அறிந்த விருதுநகர் மாவட்ட எஸ்.பி.மனோகரன் விசாரணை நடத்தி வெளியாட்களிடம் காவலர்கள் துப்பாக்கியை கொடுத்து அஜாக்கிரதையாக நடந்து கொண்டதற்காக காவலர் அன்பரசன், ஆறுமுகவேல் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.