காமெடி, மிமிக்ரி, செண்டிமெண்ட், எமோஷனல், காதல், மோதல் என்று தனக்கே உரிதான பாணியில் டான் படத்தில் கலக்கி இருக்கிறார் சிவகார்த்திகேயன்.
டான் நடிகர்கள்
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி பெரிய வசூல் செய்த படம் டாக்டர். அதில் வழக்கத்துக்கு மாறாக அமைதியான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சிவகார்த்திகேயன்.
இந்நிலையில் அவரும் பிரியங்கா மோகனும் இரண்டாவது முறையாக இணைந்து நடித்து, இன்று வெளியாகி இருக்கும் படம் தான் டான்.இதில் காமெடி, மிமிக்ரி, செண்டிமெண்ட், எமோஷனல், காதல், மோதல் என்று தனக்கே உரிய பாணியில் நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.
மேலும், எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரகனி, ராதா ரவி, சூரி, ஆதிரா, பாலா சரவணன், சிவாங்கி, மிர்ச்சி விஜய், பிக்பாஸ் ராஜு என்று பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் படம் டான். படத்தை இயக்குனர் அட்லி யுடன் உதவியாளராக இருந்த சிபி சக்கரவர்த்தி இயக்கி இருக்கிறார்.
படத்தின் விமர்சனம்
பொறியியல் கல்லூரியில் படிக்கும் ஹீரோ சிவகார்த்திகேயன் தன் அப்பாவின் வெறுப்பையும், ஆசிரியரின் ஈகோ மோதலையும் எப்படி சமாளிக்கிறார் என்பது தான் கதை. இதை காமெடி கலாட்டாவுடன் முதல் பாதியும், எமோஷனல், செண்டிமெண்ட் நிறைந்த இரண்டாம் பாதியாகவும் சொல்லியிருக்கிறார் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி.
வெறுப்பை காட்டும் அப்பாவாக சிறப்பாக நடித்திருக்கிறார் சமுத்திரகனி. பூமிநாதன் என்ற ஆசிரியர் கதாபாத்திரத்தில் வழக்கம் போல் தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் எஸ்.ஜே. சூர்யா. குறிப்பாக அவருக்கும் சிவகார்த்திகேயனுக்கும் வரும் ஈகோ மோதல் காட்சிகள் கைதட்ட வைக்கிறது.
டான் எப்படி இருக்கிறது
பள்ளி வாழ்க்கையும், கல்லூரி வாழ்க்கையும் அழகாக சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் பள்ளிக்கால கட்சிகளின் நீளம் கொஞ்சம் சலிப்பு தட்டுகிறது. இதனால் படத்தின் முதல் பாதி சுமாராகவே இருக்கிறது. இரண்டாம் பாதி படத்தை காப்பாற்றி இருக்கிறது. குறிப்பாக இறுதிக்காட்சியில் சிவகார்த்திகேயன் அம்மாவாக வரும் ஆதிரா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திருக்கிறார். கலர்புல்லாக இருக்கிறது படத்தின் மேக்கிங். அனிருத் இசை ரசிகர்களை ஆட வைத்திருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உதயநிதி, சிவகார்த்திகேயன் சினிமாவின் டான் என்று குறிப்பிட்டார்.
டானாக வெற்றிப் பெற்றாரா சிவகார்த்திகேயன் ? உங்கள் கருத்து.