சிங்கப்பூரிலிருந்து இலங்கை முன்னாள் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே வெளியேறினார்.
ராஜபக்சே வெளியேற்றம்
இலங்கை நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிதி நெருக்கடி காரணமாக மக்கள் பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக அவர்கள் போராட்டங்களை தீவிரப்படுத்தினர். இந்த சூழலில், ஆயிரக்கணக்கான மக்கள் கடந்த ஜூலை 9ம் தேதி இலங்கை அதிபர் மாளிகை முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் பின்னர், கோத்தபய தனது குடும்பத்துடன் மாலத்தீவுக்கு கடந்த ஜூலை 13ம் தேதி ராணுவ விமானத்தில் தப்பி சென்றார். மாலத்தீவு நாட்டிலும் கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து அங்கிருந்து ஜூலை 14ல் சிங்கப்பூருக்கு கோத்தபய ராஜபக்சே தப்பியோடினர். சிங்கப்பூரில் கோத்தபய ராஜபக்சே வழங்கப்பட்ட பிரதிநிதி வருகை அனுமதி இன்றுடன் காலாவதியானது.
இந்தநிலையில், சிங்கப்பூரிலிருந்து தாய்லாந்துக்குச் செல்ல விரும்பி அந்தநாட்டிடம் கோரிக்கை வைத்திருந்தார். உயர் பதவி வகிப்போருக்கான தூதரக பாஸ்போர்ட் உள்ளதால் 90 நாள் வரை தாய்லாந்து நாட்டில் தங்கலாம் என அந்நாட்டு அரசு பதில் கூறியிருந்தது. இதனால் தற்போது தாய்லாந்துக்கு கோத்தபய ராஜபக்சே இன்று செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

