சென்னை தீவுத் திடலில் ஆகஸ்ட் 12, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் உணவுத் திருவிழா நடைபெறவுள்ளது.
உணவுப் பாதுகாப்பில் விழிப்புணர் ஏற்படுத்தும் நோக்கில் சென்னை தீவுத்திடலில் நாளை முதல் 3 நாட்களுக்கு உணவு திருவிழா நடைபெறவுள்ளது. தமிழக உணவு பாதுகாப்பு துறை சார்பில் நடத்தப்படும் இந்த திருவிழாவில் 150 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் உணவு சார்ந்த போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் 1500 குழந்தைகளுக்கு அடுப்பில்லாமல் எவ்வாறு சமைப்பது போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், வரும் 14ம் தேதி உணவுப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபயணம் மேற்கொள்ளப்போவதாக கூறப்படுகிறது.

