பொன்னியின் செல்வன் திரைப்பட இசை வெளியிட்டு விழாவில் தமிழின் முன்னணி நடிகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
இசை வெளியீட்டு விழா
கல்கியின் புகழ் பெற்ற ‘பொன்னியின் செல்வன்’ என்னும் நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கி உள்ள திரைப்படம்”பொன்னியின் செல்வன்”. இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30ம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின. இந்தியாவின் முன்னணி திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இப்படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘பொன்னியின் செல்வன் -1’ பாகத்தின் ‘இசை வெளியீட்டு விழா’ வருகிற செப்டம்பர் 6ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

