முத்தையா இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் நாளை வெளியாகவிருக்கும் விருமன் படத்தின் கதை தன்னுடையது என்று உதவி இயக்குனர் ஒருவர் புகாரளித்துள்ளார்.
விருமன் படம்
கார்த்தி மற்றும் அதிதி ஷங்கர் இணைந்து நடித்துள்ள படம் விருமன். குட்டி புலி, கொம்பன், மருது ஆகிய படங்களை முத்தையா இந்த படத்தை இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் ராஜ்கிரண், பிரகாஷ் ராஜ், சூரி ஆர்.கே. சுரேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும், 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரித்துள்ளார். ஏற்கனவே சென்சாரில் யு/ஏ சான்றிதழ் பெற்ற விருமன் படம் ஆகஸ்ட் 12ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கதை திருட்டு
இந்நிலையில், விருமன் படத்தின் கதை தன்னுடையது என்றும் அதனை இயக்குனர் முத்தையா திருடி படமாக எடுத்துள்ளார் என்றும் உதவி இயக்குனர் ஒருவர் எழுத்தாளர் சங்கத்தில் புகாரளித்துள்ளார். இதுகுறித்து சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

