தணிக்கை சான்றிதழ்
சிவகார்த்திகேயன் நடிப்பில், தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் உருவாகியுள்ள உருவாகியுள்ள திரைப்படம் ‘ப்ரின்ஸ்’. இப்படத்தில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா கதாநாயகியாக நடித்துளளார். மேலும், சத்யராஜ், பிரேம்ஜி அமரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைக்க, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இத்திரைப்படம் அக்டோபர் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ‘ப்ரின்ஸ்’ திரைப்படத்திற்கு தணிக்கை குழு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.