திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் கார், வேன், பஸ் ஆகிய வாகனங்கள் மூலம் வருவது வழக்கம்.
சி.சி.டி.வி கேமரா
அவர்கள் மலைப்பாதை வழியாகதான் சென்று தரிசனம் செய்ய வேண்டும். இதனால் அலிப்பிரியில் இருந்து திருமலைக்குச் செல்லும் வாகனங்களின் நேரம் 45 நிமிடமாக குறிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த மலைப்பாதையில் அவ்வப்போது சிறுத்தை நடமாட்டம் இருந்து வருகிறது. இதனை கண்காணிக்கும் நோக்கில் மலைப்பாதையில் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
ஒரு கிலோ மீட்டருக்கு 5 கேமராக்கள் வீதம் 90 கேமராக்கள் பொருத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே திருமலையில் 1,679 சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

