ஆன்மீகம்தமிழ்நாடு

திருத்தணி கோவில் : ரூ.63 லட்சம் உண்டியல் வசூல்!

ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ளது.

ஐந்தாம் படை வீடு 

இந்த கோயிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலிருந்தும் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் முருகனை தரிசித்துவிட்டு செல்வது வழக்கம். மலைக்கோயிலில் மூலவர் முருகப்பெருமானை தரிசனம் செய்யும் பக்தர்கள் உண்டியலில் பணம், நகை போன்றவற்றை காணிக்கையாகச் செலுத்துவார்கள்.

உண்டியல் வசூல்

இந்நிலையில், கோவில் துணை ஆணையர், செயல் அலுவலர் விஜயா, கோயில் தக்கார் ஜெயப்பிரியா ஆகியோர் முன்னிலையில் திருக்கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் 63 லட்சத்து 65 ஆயிரத்து 549 ரூபாய் ரொக்கம் மற்றும் 365 கிராம் தங்கம், 5357 கிராம் வெள்ளி ஆகியவை காணிக்கையாக வந்துள்ளதாக கூறப்படுகிறது.

Related posts