சினிமாவெள்ளித்திரை

நடிகர் வைபவ் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

2010-ம் ஆண்டு வெளியான கோவா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் வைபவ். அதனைத்தொடர்ந்து ஈசன், மங்காத்தா, மேயாதமான் ஆகிய படங்களில் நடித்தது மூலம் பிரபலமானார். இவர் நடிப்பில் சமீபத்தில் திரையரங்கில் வெளியான திரைப்படம் ‘பபூன்’. அறிமுக இயக்குனர் அசோக் வீரப்பன் இப்படத்தை இயக்கியிருந்தார். மேலும், ‘நட்பே துணை’ படத்தில் நடித்த அனகா இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

இந்நிலையில், ‘பபூன்’ திரைப்படம் 14-ம் தேதி நேரடியாக நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Related posts