டிரைலர் ரிலீஸ்
இரும்புத்திரை, ஹீரோ ஆகிய படங்களை இயக்கியதின் மூலம் பிரபலமானவர் இயக்குனர் பி.எஸ்.மித்ரன். இவர் அடுத்ததாக இயக்கியுள்ள திரைப்படம் திரைப்படம் ‘சர்தார்’. நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடிக்க, பிரபல ஹிந்தி நடிகர் சங்கி பாண்டே, ராஷிகண்ணா, ரெஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம் வரும் 21-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் முதல் பாடல் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், ‘சர்தார்’ படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
The trailer of #Sardar arrives tomorrow & we can already feel the excitement 🥁👏#SardarTrailer #SardarDeepavali @Karthi_Offl @Prince_Pictures @Udhaystalin @Psmithran @gvprakash @RaashiiKhanna_ @lakku76 @rajishavijayan @ChunkyThePanday @kalaignartv_off @SonyMusicSouth pic.twitter.com/oU7WCszEHM
— Red Giant Movies (@RedGiantMovies_) October 13, 2022