சினிமாபயணம்

மீண்டும் சுற்றுப்பயணத்தில் நடிகர் அஜித் : ட்ரெண்டாகும் புகைப்படங்கள்!

சுற்றுப்பயணம்

போனி கபூர் தயாரிப்பில், அஜித் நடித்துள்ள திரைப்படம் ‘துணிவு’. வங்கி கொள்ளையை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தை இயக்குனர் எச்.வினோத் இயக்கியுள்ளார். மேலும், மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், விசாகப்பட்டினம், புனே உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. இந்த படப்பிடிப்பின் போது நடிகர் அஜித் லடாக் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதில் நடிகை மஞ்சுவாரியர் பங்குபெற்றார்.

இந்நிலையில், இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளில் நடிகர் அஜித் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

Related posts