வதந்தி
சிவாஜி கணேஷ் நடிப்பில், 1961-ம் ஆண்டு வெளியான ‘ஸ்ரீ வள்ளி’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் விஜயகுமார். இவர் கதாநாயகன், குணசித்திர வேடம் என 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ‘நாட்டாமை’ திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் ரசிகர்களால் இன்றளவும் பேசப்படுகிறது. தற்போது தந்தை வேடங்களில் நடித்து வரும் இவர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘சினம்’ திரைப்படத்தை தயாரித்துள்ளார். இதனிடையே கடந்த சில நாட்களாக விஜயகுமாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
ட்விட்டர் பதிவு
இந்நிலையில், நடிகர் விஜயகுமாரின் மகனும், நடிகருமான அருண் விஜய் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘அப்பா வீட்டில் நலமுடன் இருக்கிறார். தயவு செய்து வதந்திகளை நம்ப வேண்டாம்’ என குறிப்பிட்டுள்ளார்.
To all my friends, family and fans.. Appa is hale and HEALTHY at home.
Kindly do not believe any rumors!
Thank you for all your concern and love! ❤️ pic.twitter.com/oKm4a306lG— ArunVijay (@arunvijayno1) December 22, 2022

