சினிமாவெள்ளித்திரை

நயன்தாரா பட ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஓடிடி ரிலீஸ்

‘நேரம்’, பிரேமம் ஆகிய படங்களை இயக்கியதின் மூலம் மிகவும் பிரபலமானவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன். இதனையடுத்து 7 ஆண்டுகளுக்கு பின்னர் இவர் இயக்கத்தில் ‘கோல்டு’ என்ற படம் உருவானது. இதில் பிருதிவிராஜ் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக நயன்தாரா நடித்திருந்தார். தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் கடந்த 1ம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில், ‘கோல்டு’ படம் வருகிற 29-ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

Related posts