கல்விதமிழ்நாடு

அம்மா உணவகங்களில் தயாராகும் பள்ளி குழந்தைகளுக்கான காலை சிற்றுண்டி !

பள்ளி குழந்தைகளுக்கான காலை சிற்றுண்டி திட்டத்திற்கும், அம்மா உணவகத்திற்கும் தொடர்பு இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிற்றுண்டி திட்டம்

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் காலை சிற்றுண்டி திட்டம் கொண்டுவரப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த திட்டத்தின் கீழ் 1 முதல் 5-ம் வகுப்பு பயிலும் அரசு தொடக்கப்பள்ளி குழந்தைகள் மட்டும் பயன்பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதன் முதல்கட்டமாக தமிழகத்தில் 1545 அரசு பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அம்மா உணவகம்

இந்த உணவு 5 அம்மா உணவகங்களில் இருந்தும் ஒரு பள்ளியில் இருந்தும் தயாரித்து அருகில் உள்ள பள்ளிகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அம்மா உணவகங்களில் காலை சிற்றுண்டிக்காக தனி சமையல் கூடம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related posts