அரசியல்இந்தியாசின்னத்திரை

உள்துறை அமைச்சர் அமித்ஷா, நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் சந்திப்பு !

தெலுங்கில் திரைதுறையில் முன்னணி நடிகராக இருக்கும் ஜூனியர் என்.டி.ஆர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துள்ளார்.

ஜூனியர் என்.டி.ஆர்

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ஜூனியர் என்.டி.ஆர் உள்ளார். இவர் ஆர்.ஆர்.ஆர்’ பட வெற்றிக்கு பிறகு இந்தியா முழுவதும் அறியப்பட்ட ஹீரோவாக மாறியுள்ளார். தெலுங்கானாவில் முனுகோட் தொகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜகோபால் தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும், அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இவர் ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் என்.டி.ஆரின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது. இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக தெலுங்கானா சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஐதராபாத்தில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆருடன் சந்தித்தார். அதோடு அமித்ஷா அழைப்பு விடுத்திருந்த உபசரிப்பு விருந்திலும் கலந்து கொண்டுள்ளார் ஜூனியர் என்.டி.ஆர்.இதனால் இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts