முதல்வர் வாழ்த்து
சென்னையின் 383-வது தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், பிரிட்டிஷ் ஆட்சியில் கட்டமைக்கப்பட்ட மெட்ராஸை சென்னையாக்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர். அதற்கு இன்று 383-வது பிறந்தநாள். திராவிட மாடல் ஆட்சியில் வந்த திட்டங்களுக்கு சென்னை ஒரு ரோல் மாடல்.
இப்போது நீங்கள் பார்க்கும் இந்த நவீனச் சென்னையை வடிவமைப்பதில், மேயராக இருந்த என் பங்களிப்பும் இருக்கிறது என்பதில் பெருமை’ என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
பிரிட்டிஷார் கட்டமைத்த மெட்ராஸை சென்னையாக்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர்.
அதற்கு இன்னைக்கு 383வது பிறந்தநாள். திராவிட மாடல் ஆட்சிக்காலத்தின் திட்டங்களுக்கு சென்னை ஒரு ரோல் மாடல். (1/2) pic.twitter.com/KUBvODJVve
— M.K.Stalin (@mkstalin) August 22, 2022

