அரசியல்இந்தியா

இந்தியா மீது தாக்குதல் நடத்துவோம் – அல்-கொய்தா அமைப்பு மிரட்டல் !

இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களான டெல்லி, மும்பை, உத்தரபிரதேசம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தற்கொலை படை தாக்குதல் நடத்துவோம் என அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது.

பாஜக அவதூறு கருத்து

தேசிய பாஜக செய்தி தொடர்பாளர் நுபூர் ஷர்மா மற்றும் டெல்லி ஊடக பிரிவு தலைவர் நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் நபிகள் நாயகம் குறித்து தெரிவித்த கருத்து உலக அளவில் சர்சையாகியுள்ளது. இந்தநிலையில், இருவரும் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ‘எந்த ஒரு மதத்தையும் கடவுளையும் அவமதிப்பதை பாஜக ஒரு போதும் அனுமதிக்காது. பிற மதத்தை நிந்தனை செய்யும் எந்த ஒரு சிந்தனையும் செய்யலையும் பாஜக ஊக்குவிக்காது’ என பாஜக அறிக்கை வெளியிட்டுள்ளது.

 Nupur Sharma naveenkumar
Nupur Sharma naveen kumar
அல்-கொய்தா மிரட்டல்

இந்நிலையில், இஸ்லாமிய மத கடவுளின் இறை தூதர் குறித்து சர்ச்சை கருத்து கூறியதற்காக இந்தியாவின் பல்வேறு நகரங்களின் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவோம் என அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது. ஜூன் 6ம் தேதி வெளியிட்ட கடிதத்தில், “நபிகளின் இஸ்லாமிய மத இறை தூதர் கண்ணியத்தை காப்பதற்காக டெல்லி, மும்பை, உத்தரபிரதேசம், குஜராத் ஆகிய பகுதிகளில் நாங்கள் தற்கொலைப்படை தாக்குதல்களை நடத்துவோம். டெல்லி, மும்பை, உத்தரபிரதேசம், குஜராத்தை சேர்ந்த காவி பயங்கரவாதிகள் தங்கள் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.” என்று கூறப்பட்டுள்ளது.

Al-Qaeda
Al-Qaeda
இந்திய அரசு மன்னிப்பு

முன்னதாக, முகமது நபி குறித்து பாஜக பிரதிநிதிகள் தெரிவித்த அவதூறான கருத்து தொடர்பாக ஈரான், சவுதி அரேபியா, கத்தார், குவைத் உள்ளிட்ட பல்வேறு இஸ்லாமிய நாடுகள் இந்திய தூதரகத்திற்கு சம்மன் அனுப்பி உள்ளன. அதேபோல், பாஜக நிர்வாகிகளின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள இஸ்லாமிய ஒருங்கிணைப்பு கூட்டமைப்பு, இந்த விவகாரம் தொடர்பாக இந்திய அரசு பொது மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

Related posts