இந்தியாசமூகம்

சோனியா காந்தியின் உதவியாளர் மீது பாலியல் வன்கொடுமை புகார் !

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் உதவியாளர் பி.பி மாதவன் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சோனியா காந்தி

காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் தனி உதவியாளராக இருந்து வருபவர் பி.பி. மாதவன். 71 வயதான இவர் மீது பெண் ஒருவர் டெல்லி போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அவரது கணவர் மறைவுக்கு பின், வேலை தேடி அலைந்திருக்கிறார். அப்போது மாதவனை தொடர்பு கொண்டுள்ளார். அவர் அந்த பெண்ணை முதலில் நேர்காணலுக்கு அழைத்துள்ளார்.

சோனியா காந்தி

பாலியல் வன்கொடுமை

இதனையடுத்து உத்தம் நகர் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே அந்த பெண்ணை அழைத்து சென்றுள்ளார். அவரை கட்டாயப்படுத்தி காரில் ஏற்றியுள்ளார். பிறகு அந்த பெண்ணின் அனுமதியின்றி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்ததகவும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்பெயரில் டெல்லி போலீசார் இந்திய தண்டனைச் சட்டம்(IPC) பிரிவு 376 மற்றும் 506ன் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், அவர் மீது ‘கிரிமினல் மிரட்டல்’ குற்றச்சாட்டும் பதிவு செய்துள்ளனர் டெல்லி காவல்துறையினர்.

மறுப்பு

இதனிடையே தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானது என்றும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்றும் மாதவன் தெரிவித்துள்ளார். மேலும், இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘புகார்தாரர் மற்றும் அவருக்குப் பின்னால் உள்ளவர்களால் எனக்கு எதிராக நடத்தப்படும் அவதூறு பிரச்சாரத்தை நான் கண்டிக்கிறேன். இந்தப் புகார் என் நற்பெயரை இழிவுபடுத்துவதற்காக தூண்டப்பட்டதாக கருதுகிறேன்’ என்று மாதவன் தெரிவித்துள்ளார்.

delhi police

சோனியா காந்தியின் தனி உதவியாளர் மீது எழுந்த இந்த பாலியல் வன்கொடுமை புகார் டெல்லி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts