ஜூலை 11ம் தேதி நடைபெற இருக்கும் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தமிழக அரசு தடை விதிக்காது என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அதிமுக பிளவு
அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பல ஆண்டுகளாக பேசப்பட்டு வந்தது. கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி இடையே பிரிவை ஏற்படுத்தி வந்த ஒற்றை தலைமை விவகாரம் தற்போது, பூதாகரமாக வளர்ந்துள்ளது. கழகத்தின் பெரும்பாலான அமைச்சர்கள் மற்றும் தொண்டர்கள்,
முன்னாள் தமிழக முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிசாமி தான் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் ஒற்றைத்தலைமைக்கு வர வேண்டும் என்று உறுதியாக உள்ளனர்.

பொதுக்குழு கூட்டம்
இதனையடுத்து இந்த ஒற்றைத்தலைமை பிரச்சனைக்கு தீர்வு காணும் நோக்கில் பொதுக்கூட்டத்தை கூட்ட எடப்பாடி ஆதரவாளர்கள் முடிவு செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொருட்டு பன்னீர்செல்வம், பொதுக்கூட்டத்தை நடத்த கூடாது என்று வலியுறுத்தி வந்தார். ஆனால் இவரின் பேச்சை ஒரு பொருட்டாக மதிக்காமல் எடப்பாடியின் ஆதரவாளர்கள் கூட்டத்தை கூட்ட முடிவு செய்தனர் . பின்பு பன்னீர்செல்வம் நீதிமன்றத்தை நாடினார். முக்கிய முடிவுகள் எடுக்க கூடாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பதவிகள் காலாவதி
இதனால் ஆதரமடைந்த எடப்பாடி ஆதரவாளர்கள் பொதுக்கூட்டத்தில், பன்னீர்செல்வத்தை அவமதிப்பு செய்தனர். இதனால் கோபமடைந்த பன்னீர்செல்வம் கூட்டத்தை விட்டு வெளியேறினார். இதனை அடுத்து பொதுக்கூட்டம் ஜூலை 11 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இதற்கிடையே கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி ஆகிவிட்டது என்று முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்தார்.

பொதுக்கூட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மருத்துவமனை தண்ணீர் கிணற்றில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது பொதுக்கூட்டம் தொடர்பாக எழுந்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், அதிமுக பொதுக்கூட்டத்திற்கு தமிழக அரசு தடை விதிக்காது என்றும்,கொரானோ பரவலை கருத்தில் கொண்டு அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று தெரிவித்தார்.


