இந்தியாசமூகம் - வாழ்க்கைதமிழ்நாடுமருத்துவம்

கொரோனா : மாநில அரசுகள் உஷார் – மத்திய சுகாதாரத்துறை கடிதம் !

கொரோனா மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் மாநில செயலாளர்களுக்கு கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

கோவிட் -19 பரவல்

இந்தியாவில் 2022ம் ஆண்டு தொடக்ககாலத்தில் கொரோனா பரவல் சற்று குறைந்திருந்தது. ஆனால் தற்போது கொரோனா பரவல் இந்தியா முழுவதும் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த மாதத்தில் இருந்து கொரோனா நோய்த் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டுமல்லாது உலகம் முழுவதிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக கையாளப்படாத காரணத்தாலே கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

corona

இந்தியாவில் கொரோனா

கொரோனா பாதிப்பு இந்தியாவைப் பொறுத்தவரை அதிகமாக மும்பை, கொல்கத்தா, டெல்லி போன்ற நகரங்களில் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. மேலும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களிலும் பாதிப்பு மிகத் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், சில நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை ஏற்றமும், இறக்கமுமாக பதிவாகி வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் இரண்டு நாட்களுக்கு முன்பு தினசரி கொரோனா பாதிப்பு 11 ஆயிரம் என்ற அளவில் இருந்த நிலையில், நேற்று 17 ஆயிரத்தைத் தாண்டி பதிவானது.

covid -19

முக்கிய நகரங்கள்

மேலும், தலைநகர் டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மீண்டும் வேகம் பிடித்துள்ளன. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து நோய் தடுப்பு நடவடிக்கைகளில் அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகின்றனர். முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முகக்கவசம் அணியவில்லை என்றால் அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

main city

பண்டிகை காலங்கள்

இந்நிலையில், அடுத்தடுத்து பண்டிகை காலம் வருவதால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா பரவல் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் மாநில செயலாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். “கடிதத்தில் மாநில அரசுகள் மருத்துவ வசதி, மருந்துகள் இருப்பு ஆகியவற்றை தயாராக வைத்து இருக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது.

கடிதம்

மேலும், கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்படும் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இருப்பு உள்ளிட்டவை தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரிய திருவிழாக்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மருத்துவ வசதிகளை ஏற்படுத்த வேண்டும். பொதுக்கூட்டங்கள் மற்றும் வழிபாட்டு கூட்டங்கள் நடைபெறும் இடங்களில் காற்றோட்ட வசதிகளை உறுதி செய்ய வேண்டும்.” என கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

rajesh bhushan

மக்களுக்கான விதிமுறைகள்

மக்களுக்கு வேண்டுகோள் குறிப்பாக பரிசோதனைகளை அதிகப்படுத்துதல், முகக்கவசம் அணிவதில் கவனம் செலுத்துதல், தடுப்பூசி போடும் பணிகளை விரிவுப்படுத்துதல் போன்றவற்றை பின்பற்றவும் மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இது போன்ற சூழல்களில் நோய்த் தடுப்பு தொடர்பாக மத்திய மாநில அரசுகள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு பொதுமக்களும் , ஆதரவு தர வேண்டுமெனவும், இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் உடனடியாக தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் மாநில செயலாளர்களுக்கு கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

Related posts