மத்தியில் பாஜக அரசு ஆட்சி பெறுபேற்று 8 ஆண்டு காலம் முடிவுற்ற நிலையில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் திருச்சியில் நடைப்பெற்றது. அப்போது, ‘மதுரை ஆதீனத்தை தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு மிரட்டி வருகிறார். ஆதீனத்தின் மேல் மட்டும் நீங்கள் கையை வைத்து பாருங்கள்’ என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எச்சரித்துள்ளார்.
திருச்சியில் பொதுக்கூட்டம்
திருச்சி புத்தூர் நால்ரோடு அருகே, மத்தியில் பாஜக ஆட்சி பெறுபேற்று 8 ஆண்டு காலம் முடிவுற்ற நிலையில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் திருச்சியில் நேற்று நடைப்பெற்றது. பொதுக்கூட்டத்தில் மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமை தாங்கினார். அப்போது பேசிய மாநில தலைவர் அண்ணாமலை, திருச்சி மாவட்டத்தில் வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெரும் என கூறினார்.
அன்பில் மகேஷ்
‘அவர் நண்பர் உதயநிதி ஸ்டாலின் ஷூட்டிங் நிகழ்ச்சியில் லைட்டு பாயாக அமைச்சர் சென்று அமர்ந்திருப்பார். பின்னர் கிடைக்கும் கொஞ்சம் நேரத்தில் பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்குவர். மாணவர்கள் எப்படி இருக்க கூடாது என்பதற்கு அன்பில் மகேஷ் உதாரணம். மாணவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று பாரத பிரதமர் மோடியை பார்த்து மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்’ என பேசியுள்ளார்.
அமைச்சர் சேகர்பாபு காவி வேட்டி
அதன் பின்னர், ‘சமீபகாலமாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு புது காஸ்டியூம் போட்டுள்ளார். மீண்டும் காவி வேட்டி கட்ட துவங்கியுள்ளார். மதுரை ஆதீனத்தை தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு மிரட்டி வருகிறார். பழைய சேகர்பாபுவை பார்ப்பதற்குத் தான் மோடி அரசு காத்துக் கொண்டு இருக்கிறது. ஆதீனத்தின் மேல் மட்டும் நீங்கள் கையை வைத்து பாருங்கள்.
ஆதீனத்தை மிரட்டும் வேலையை நிறுத்தி விடுங்கள் என்று எச்சரிக்கை விடுத்தார். மதுரையில் துறவிகள் மாநாடு நடந்து முடிந்திருக்கிறது. ஆதீனத்தை நேரில் வரச்சொல்லி முதல்வரை சந்திக்க வைக்கின்றனர். ஆதீனத்தை மிரட்ட ஆரம்பித்து விட்டனர். இவர்களுடைய அழிவுக்கு இது தான் காரணமாக இருக்கும்’ என எச்சரித்துள்ளார்.
விளைவுகள் கடுமையாக இருக்கும்
இதையடுத்து, ‘வடபழனி கோவிலுக்கு சொந்தமான 5.5 ஏக்கர் நிலத்தை மீட்கப்பட்டதாக கூறுகின்றனர். ஆனால் அந்த நிலத்தை 2007ம் ஆண்டு குத்தகைக்கு விட்டதே இவர்கள் தான். தப்பி தவறிகூட ஆதீனத்தை தொட்டு விடாதீர்கள் விளைவுகள் கடுமையாக இருக்கும். திமுக எம்.எல்.எக்கள், எம்.பிக்கள் மற்றும் நிர்வாகிகள் மொத்தம் 10 தனியார் மருத்துவக்கல்லூரிகள் நடத்தி வருகின்றனர். 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை ஜூடிசியல் என்கொயரி போட்டால் இன்று கோபாலபுரத்தில் உள்ள பாதி நபர்கள் சிறை செல்ல வேண்டும்’ என கூறியுள்ளார்.
அனைத்து இடத்திலும் ஊழல்
அனைத்து இடத்திலும் ஊழல் செய்யும் கட்சியாக திமுக இருக்கிறது. எல்லா துறைகளிலும் தனது குடும்பத்தை சேர்ந்தவர்கள் இருக்கவேண்டும் என்று திட்டமிட்டு நடந்து வருகிறார்கள். கடந்த 1974ம் ஆண்டு கருணாநிதி இரண்டு தவறுகள் செய்தார். ஓன்று 356வது சட்ட பிரிவை பயன்படுத்த வேண்டும் என்பதற்காக முதலில், ஹேமாவதி ஆணை கட்ட காரணமாக இருந்தார். இரண்டாவது கச்சத் தீவை தூக்கி கொடுத்தார். மேகதாது பற்றி பேசுவதற்கு முதலமைச்சருக்கு உரிமையில்லை.
தமிழகத்தில் பாஜக சார்பாக 25 எம்.பி வருகின்ற தேர்தலில் நாடாளுமன்றம் செல்வார்கள். குறிப்பாக 5 எம்.பிக்கள் மத்திய அமைச்சராக இருப்பார்கள் என திருச்சியில் நடந்த கொள்கை விளக்க பொதுகூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.