சமூகம்தமிழ்நாடு

இனி திருமணம் பண்ணுறவங்களுக்கு ஜாலி தான் ! புதிய வசதியை அறிமுகபடுத்தியுள்ளது தமிழக அரசு ! நோ மோர் டென்ஷன் !

திருமண சான்றிதழில் திருத்தம் செய்ய வேண்டுமென்றால் ஆன்லைன் மூலமாகவே சரி செய்யும் வசதியை கொண்டு வந்துள்ளது தமிழக அரசு.

கட்டாய திருமண பதிவு

தமிழ்நாட்டில் திருமண பதிவு செய்வது அவரவர் விருப்பத்தில் இருந்தது. ஆனால் அது பல சட்டச்சிக்கலை ஏற்படுத்தியதால், கடந்த 2009 கொண்டு வரப்பட்ட திருத்தச் சட்டப்படி திருமணம் செய்துகொள்ளும் தம்பதியர் தங்கள் திருமணத்தை கட்டாயம் பதிவு செய்யவேண்டும் என சட்டம் கொண்டு வரப்பட்டது.


திருமணத்தை பதிவு செய்தால் மட்டுமே அத்திருமணம் சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் என்றும் சொல்லப்பட்டது. மேலும், திருமணம்முடிந்த 90 நாட்களுக்குள் திருமணத்தை பதிவு செய்ய வேண்டும். தவறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் சட்டம் கொண்டுவரப்பட்டது.

லஞ்சம்

கடந்த காலங்களில் திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்றால் உரிய ஆவணங்களுடன் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு நேரில் செல்ல வேண்டும். மேலும், சான்றிதழில் சிறிய திருத்தம் செய்ய வேண்டுமானாலும் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு தான் நேரில் செல்லவேண்டும்.


இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மேலும், இடைத்தரகர்கள், அதிகாரிகள் என பலர் சான்றிதழில் திருத்தம் செய்ய லஞ்சம் பெற்று வந்தனர். இதுகுறித்து மக்கள் பல முறை அரசாங்கத்திடம் புகார் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையிலும், லஞ்சத்தை ஒழிக்கும் நோக்கத்திலும் ஆன்லைன் முறையை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.

ஆன்லைன் முறை

திருமண சான்றிதழை இணையதளம் வழியாக திருத்தம் செய்யும் வசதியை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.


இதனால் இனி திருமண சான்றிதழில் திருத்தம் செய்வதற்கு இனி சார்பதிவாளர் அலுவலகம் செல்ல தேவையில்லை. https://tnreginet.gov.in/portal என்ற இணையதள பக்கத்திற்கு சென்று லாகின் செய்து திருமண சான்றிதழில் திருத்தம் செய்து கொள்ளலாம். தமிழக அரசின் இந்த நடவடிக்கை பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

Related posts