தமிழ்நாடுதொழில்நுட்பம்

வரவேற்பைப் பெரும் யமஹா நிறுவனத்தின் புதிய MT-15 V2.0 பைக் – “அப்படி என்னதான் ஸ்பெஷல்”

யமஹா நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்த mt-15-v2 பைக் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பைக் cyan blue , ice fluo vermilion , metalic black , racing blue ஆகிய நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

இது மேம்பட்ட ஸ்டிரீட் நேக்கட் மோட்டார் சைக்கிள் மாடலில் கோல்டு ஃபினிஷ் செய்யப்பட்ட யுஎஸ்டி முன்புற ஃபோர்க்குளை கொண்டுள்ளது. மேலும் இதில் சிங்குல் சேனல் ஏ.பி.எஸ்., டிராக்‌ஷன் கண்ட்ரோல்,  இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், மொபைல் ஆப்  கனெக்டிவிட்டி, ரியல்டைம் டேட்டாவை ஸ்மார்ட் போனிலேயே பார்த்து தெரிந்துகொள்ளும் அம்சமும்  இடம்பெற்றுள்ளது.

இந்த பைக் 155cc கொண்டது. சிங்கில் சிலிண்டர், லிக்கிவ்டு கூல்டு இன்ஜின் மற்றும் விவிஏ தொழில்நுட்பம் வழங்கப்படவுள்ளது. மேலும், 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் மற்றும் அப்-குயிக் ஷிஃப்டர் தரப்படுகிறது. இதன் இன்ஜின் 18.1 பி.ஹெச்.பி. பவர், 14.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறனை கொண்டுள்ளது. மணிக்கு 130kmph வரை செல்லும் என்று தெரிவித்து உள்ளனர் .

இந்த பைக்கை ரூ.1000 முதல் ரூ.10000 வரை கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்யலாம். இந்த பைக்கின் விலை சென்னையில் ரூ.1.62 லட்சம். on road விலை ரூ. 1.86 என வெளியாகியுள்ளது.

Related posts